புதுடெல்லி:
உலக அளவில் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவர்களின் பட்டியலை வட அமெரிக்க நிறுவனம் ஒன்று அடிக்கடி வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ள பட்டியலில் உலக அளவில் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை 76 சதவீதம் பேர் அங்கீகரித்து உள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தை பிரதமர் மோடி தொடர்ந்து அலங்கரித்து வருகிறார். இத்றகாக பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் அனில் பலூனி தனது எக்ஸ் தளத்தில், 'ஜி-20 உச்சி மாநாட்டின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு, பிரதமர் மோடி அதிக உலகளாவிய ஒப்புதல் மதிப்பீடுகளைக் கொண்ட தலைவராக இருக்கிறார்' என குறிப்பிட்டு இருந்தார்.
ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், எண்ணற்ற தனி மனிதர்களின் விதியை மாற்றியமைப்பதிலும் மோடி குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார் எனக்கூறியுள்ள மத்திய மந்திரி சோபா கரண்டலே, அவர் உலக அளவில் நம்பிக்கை மற்றும் தலைமையின் இணையற்ற சின்னமாக தனித்து நிற்கிறார் என்றும் கூறியுள்ளார்.
இதே கருத்தை ஆந்திர பிரதேச பா.ஜனதா தலைவர் புரந்தேஸ்வரியும் குறிப்பிட்டு உள்ளார்.