Type Here to Get Search Results !

ரூ.538 கோடி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது - அமலாக்கத்துறை அதிரடி

மும்பை:

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 25 ஆண்டுகள் கடந்து பயணித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தனது செயல்பாடுகளை நிறுத்தியது. நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகினார்.

கடந்த மே 5-ம் தேதி மும்பையில் நரேஷ் கோயலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சி.பி.ஐ. பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் அவரிடம் விசாரணை நடத்தியது.

மத்திய புலனாய்வு முகமையின் முந்தைய 2 சம்மன்களை ஏற்று அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.