இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி தனது 93-வது வயதில் காலமானார். அவரது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தும் விதமாக வெளியிட்டுள்ள செய்தில் ''வாஜ்பாய் தலைமையில் இந்தியா பெரிதும் பயனடைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கும், அதை அனைத்து துறைகளிலும் 21-ம் நூற்றாண்டில் எடுத்துச் செல்வதற்கும் முக்கிய பங்கு வகித்தார்.
140 கோடி மக்களுடன் இணைந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துகிறேன்'' என்றார்.
பா.ஜனதா சார்பில் முதல் பிரதமரான வாஜ்பாய், கூட்டணி கட்சிகளுடன் ஆறு ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அப்போது சீரமைப்பு, கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தினார்.