Type Here to Get Search Results !

கடந்த 10 ஆண்டுகளில் உலக நண்பனாக உருவெடுத்த இந்தியா - பிரதமர் பேச்சுக்கு ஜெய்சங்கர் பாராட்டு

புதுடெல்லி:

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி 10-வது தடவையாக தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதாக அவர் உறுதிபட தெரிவித்தார். அவரது உரைக்கு மத்திய மந்திரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடியின் உரை உத்வேகம் அளிப்பதாக இருந்தது. சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கிய அமிர்த காலத்தில் இந்தியாவின் இலக்குகளை அவர் பட்டியலிட்டார். மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத் தன்மை ஆகிய 3 அம்சங்களை உயர்த்திப் பிடித்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலக நண்பன் ஆக உருவெடுத்ததாக தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.