புதுடெல்லி:
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை முன்னிலைப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம். பெரும்பான்மையான அக்னி வீரர்கள் 4 ஆண்டு சேவைக்குப் பிறகு வேலையில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்படும். இது அவர்களின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும்.
அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது. கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிட்டது. தற்கொலை செய்து இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
தேசபக்தி மற்றும் வீரம் நிறைந்த ஆயுதப்படை வீர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். எங்கள் இளைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. நியாயம் மற்றும் நீதியை உறுதிப்படுத்துமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் எனதெரிவித்துள்ளார்.