Type Here to Get Search Results !

அதிகரிக்கும் கொரோனா.. இப்போதைக்கு பயப்பட வேண்டாம்.. எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர்..

டெல்லியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

"நேற்று இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறோம். அனைத்து விதமான பரிசோதனைக்கான வசதியும் உள்ளது. நுண்ணுயிரியல் பிரிவில் என் கண்காணிப்பின் கீழ் தனியாக 12 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது."


"கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகபடுத்துவோம். தங்களது வார்டுகளுக்கு கொரோனா அறிகுறிகளுடன் வருவோரை, அங்கேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அனைத்து துறைகளைுக்கும் உத்தரவிட்டுள்ளோம்."

"மருந்துகள், பி.பி.இ. கிட் மற்றும் இதர உபகரணங்கள் என கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் தேவையான அளவுக்கு தயார்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு நாளும், கொரோனா நிலை குறித்து கண்காணித்து வருகிறோம். தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது," என்று எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சஞ்சீவ் லால்வானி தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.