திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த மதுரா நகரை சேர்ந்தவர் கிரி பாபு (வயது 27). கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி, ராஜேஸ்வரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 3 மாத குழந்தை உள்ளது.
கிரி பாபு மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி தனது குழந்தையுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அப்பலாய குண்டாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் மனைவிக்கு போன் செய்த கிரி பாபு குடும்பம் நடத்த வரவேண்டும் என கூறினார். அதற்கு ராஜேஸ்வரி உன்னுடைய நடத்தை மாற்றிக் கொண்டால்தான் வருவேன் என்றார். நீ குடும்ப நடத்த வரவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என கிரி பாபு தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று கிரி பாபு வாட்ஸ்அப் வீடியோ காலில் மனைவிக்கு போன் செய்தார். மின்விசிறியில் கயிறை தொங்கவிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
இதனைக் கண்ட ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என கணவரிடம் கெஞ்சினார். இருப்பினும் கிரி பாபு மனைவியை பார்க்க வைத்து மின்விசிறியில் தூக்கில் தொங்கி இறந்தார்.
இதுகுறித்து ராஜேஸ்வரி அலிப்பிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரி பாபு பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.