230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, சரியாக வேலை செய்கிறதா? என பூத் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு தொடங்கியது.
மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா- காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக பா.ஜனதா நம்புகிறது. கர்நாடகா போன்று மத்திய பிரதேசத்தில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. இரு கட்சிகளும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வாக்குகள் சேகரித்தன. டிசம்பர் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.