உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண ரசிகர்கள் அகமதாபாத்திற்கு விரைந்துள்ளனர். இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக வழிபாடு ஸ்தலங்களில் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
�