தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாக அறிவித்துள்ளது. இதன்படி 1077, 0423 2450034 மற்றும் 94437 63207 என்ற உதவி எண்களில் விபத்து குறித்த தகவல்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.