Type Here to Get Search Results !

கனமழை- சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. கத்திப்பாரா பகுதிகளில் மின்சார கேபிள் புதைக்கும் பணி நடந்ததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதனால் மீனம்பாக்கம் பகுதியில் இருந்த ஈக்காட்டுத்தாங்கல் வரையிலும் கத்திப்பாராவில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி செல்ல கூடிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

கடும் போக்குவரத்து நெரிச்சல் காரணமாக வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார். அதேபோல் வேளச்சேரியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.