Type Here to Get Search Results !

இலாகா இல்லாத அமைச்சர் பதவி- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கள் செய்யப்பட்டன.

இதில், எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். மேலும், வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த 4ம் தேதி, தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது. தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேலவலு அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.