புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்துள்ளார்.
மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை சரிபார்க்கும் வேலைகள் நடந்து வருகின்றன.
விமானம் சரியாகும் வரையில் அவர் இந்தியாவில் இருப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செல்ல வேண்டிய விமானம் இரவு 8 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா பிரதமர் செல்ல வேண்டிய சிஎப்சி 001 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை ஒரே நாள் இரவில் சரிசெய்துவிட முடியாது என்பதால், மாற்று ஏற்பாடு வரும் வரையில் கனடா பிரதமரின் குழுவினர் இந்தியாவில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளது.