2014-ம் ஆண்டுக்கு முன் ஏழைகளின் உரிமைகள் மற்றும் பணம் சூறையாடப்பட்ட காலம். ஊழல் மற்றும் மோசடியின் சகாப்தமாக நிலவியது. தற்போது சில்லறை காசு என்றாலும், நேரடியாக ஏழை மக்களின் வங்கிக் கணக்கை சென்றடைகிறது.
நிதி ஆயோக் அறிக்கையின்படி, ஐந்து ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்து வெளியே வந்துள்ளனர் என்றார் பிரதமர் மோடி.
தற்போது ஏராளமானவர்கள் வரி கட்டுகிறார்கள். தங்களுடைய வரிப் பணம் சரியான முறையில் செலவழிக்கப்படுகிறது என்பதை அவர்கள் நம்புகிறார்கள் என்பதைத்தான் அது காடடுகிறது.
வரிமான வரி ரிட்டன் தாக்குதல் செய்த தரவுகளின்படி, இந்தியர்களின் ஆண்டு வருமானம் கடந்த 9 ஆண்டுகளில் 4 லட்சத்தில் இருந்து 13 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.
மக்கள் குறைந்த வருமானம் என்ற வரம்பில் இருந்து உயர்ந்த வருமானம் என்ற வரம்பிற்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்
அனைத்து துறைகளும் வளர்ந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்திய குடிமக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளது. 2014-ல் 10-வது இடத்தில் இருந்தது. தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.
மத்திய பிரதேசத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் மேல்நோக்கு திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து பேசினார். அப்போது இவ்வாறு கூறினார்.