தமிழக-கேரள எல்லைப் பகுதியில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றி வந்த லாரி எஸ் வளைவு பகுதியில் கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்த நேரத்தில் சிறப்பு ரெயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அருகில் இருந்த தம்பதியினர் சண்முகையா, வடக்கத்தியம்மாள், காவலாளி சுப்பிரமணியன் டார்ச் லைட்டை அடித்து ரெயிலை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து காரணமாக அதிகாலை நேரத்தில் இரு மாநில எல்லைகளில் பரபரப்பு ஏற்பட்டது.