புதுடெல்லி:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் என 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்திப் பேசியதாக பிரியங்கா காந்தி மீது பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பிரியங்கா காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக பேசியது குறித்து வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, ஆம் ஆத்மி கட்சிக்கும் தேர்தல் ஆணையம் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.