காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா� நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இந்நிலையில் காஷ்மீர் பல்கலைக்கழகத்தை சுற்றிலும், போலீஸார் மற்றும் துணை ராணுவப்படைகள் உட்பட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் இடத்தை சுற்றி வாகனங்களின் சோதனை, குடியிருப்பு பகுதிகளில் ரோந்து உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவரின் காஷ்மீர் பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் காவல் துறை இயக்குனர் ஜெனரல் தில்பாக் சிங் ஆகியோர் தனித்தனியாக கூட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.