ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரின், போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் அறிவுறுத்தலின் பேரில் குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர் சுப்பிரமணி (வயது 63), டிரைவர்கள் முத்துக்குட்டி (65), கோபால் (32) மற்றும் சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் டிரைவர் முத்துக்குட்டி சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர். தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர் மற்றும் டிரைவர் கோபால் எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.