ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவின் கிவு மாகாணம் கியாங்கிட்சி பகுதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மர்மப்பொருள் ஒன்று கிடந்தது. வித்தியாசமான அந்த பொருளை சிறுவர்கள் தங்களது வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்குள்ள பெரியவர்கள் அது என்னவென்று கண்டுபிடிக்க முயன்றபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் சிறுவர்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். கடந்த இரு வாரங்களாக கியாங்கிட்சி பகுதியில் உள்ளூர் ஆயுத குழுக்களிடையே மோதல் நடந்து வருகிறது. இவர்களிடையே நடந்த மோதலின்போது வீசப்பட்ட ஏராளமான குண்டுகள் வீசப்பட்டன. அதில் ஒரு குண்டுதான் தற்போது சிறுவர்கள் எடுத்து விளையாடி வெடித்தது தெரிய வந்தது.