Type Here to Get Search Results !

பட்டாசு கடை தீ விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கர்நாடகா இழப்பீடு அறிவிப்பு

பெங்களூரு:

கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து மளமளவென நாலாபுறமும் பரவியது. இதனை கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், பட்டாசு கடை வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10 பேர் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்தவர்கள்.

இச்சம்பவத்திற்கு கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தீ விபத்து நடந்த பகுதிக்கு கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே. சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், அதிகாரிகளைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்கும் என அறிவித்தார்.

இதன்படி, பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஏற்கனவே, பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.