Type Here to Get Search Results !

விபத்தில் சிக்கிய யூ டியூபர் டிடிஎஃப் வாசன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு

பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில், சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. டிடிஎஃப் வாசம் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.

அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கையில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர், கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரர் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.