சென்னை:
அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், 1 முதல் 5ஆம் வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை பருவ தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஏற்கனவே அறிவித்தபடி அக்டோபர் 3ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.