புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவையில் நடைபெற்று வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை 11.45 மணியளவில் தனது வீட்டில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காரில் புறப்பட்டார்.
வீட்டை விட்டு வெளியே வந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டி ஒருவரைப் பார்த்து தனது காரை ராகுல் காந்தி நிறுத்துமாறு கூறினார்.
காரை விட்டு இறங்கி வாகன ஓட்டியின் அருகில் சென்று அவரைத் தூக்கிவிட்டு நலம் விசாரித்தபின் ராகுல் காந்தி அங்கிருந்து சென்றார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.