சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது, தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது உடன் அமைச்சர்கள் சேகர் பாபு, துரைமுருககன், கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்நிலையில், ஆய்வு பணிகளுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸடாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை கௌத்தூரில் 99 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்ததற்கு காரணம், தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறிதான். பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்திய கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.