உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.
அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார்.
அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில், நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
செஸ் உலகக்கோப்பை போட்டியில் தங்களின் அபாரமான செயல்திறனுக்காக தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பதற்கும் எனது வாழ்த்துக்கள்.
ஜொலித்துக் கொண்டே இருங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.