Type Here to Get Search Results !

லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின் நிலவின் தரையை தொட்டது ரோவர்

புதுடெல்லி:

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதையடுத்து, விக்ரம் லேண்டர் தரையிறங்கியபின் இந்தத் திட்டத்தின் அடுத்த பணியான பிரக்யான் ரோவர் வெளியேற்றத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்களின் சீரிய முயற்சியால் லேண்டரின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறியது. இது விஞ்ஞானிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.

இந்நிலையில், நிலவின் தரைப்பகுதியில் பிரக்யான் ரோவர் தடம் பதித்தது. ரோவர் அங்கேயே உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.