மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டி, சுற்றுலா ரெயிலின் ஒரு பெட்டியாகும். தீ விபத்து ஏற்பட்டது திருப்பதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ரெயிலின் சிறப்பு முன்பதிவு செய்யப்பட்ட கடைசி பெட்டியாகும். இந்த பெட்டியில் சுமார் 90 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் தீ விபத்து ஏற்பட்டதும் 80-க்கும் மேற்பட்டோர் பெட்டியில் இருந்த குதித்து தப்பித்துள்ளனர். அருகில் உள்ள பெட்டியில் உள்ளவர்கள், இந்த பெட்டியில் வந்து தூங்கினார்களா? என்பது தெரியவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சிலிண்டர் வைத்து சமைத்தபோது, தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 4 தீயணைப்பு வண்டிகள் மூலம் சுமார் 20 வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.�