இந்த ராக்கெட் வடிக கேக்கின் புகைப்படத்தை பீட்டா அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் அந்த பதிவில், " இந்தச் செயல் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரனில் தரையிறங்கியதைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்லாமல், வரவிருக்கும் ககன்யான் விண்கலத்திற்காக விலங்குகளுக்குப் பதிலாக மனித உருவம் கொண்ட ரோபோவை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் விலங்கு சோதனைக்கு எதிரான இஸ்ரோவின் நிலைப்பாட்டைக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், "இன்று பீட்டா இந்தியாவால் சந்திரனுக்கும், திரும்பவும் விநியோகிக்கப்படும் இந்த #சைவ கேக்கை இஸ்ரோ விரும்புகிறது என்று நம்புகிறோம். பெங்களூரில் #CravebyLeena அவர்களால் அன்புடனும் மரியாதையுடனும் தயாரிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வாழ்த்துகள்!" என்று பீட்டா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
மற்றொரு பதிவில், சந்திரயான் -3 திட்டத்தால் ஈர்க்கப்பட்டு ராக்கெட் வடிவ சைவ கேக் சாக்லேட் ட்ரஃபுல் மற்றும் ப்ளூ பட்டர்கிரீம் மூலம் செய்யப்பட்டது என்றும் பீட்டா கூறியது.
சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியதைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சந்திரனின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் டச் டவுன் இடம் இனி 'சிவ் சக்தி' புள்ளி என்றும், சந்திரயான்-2 சந்திரன் தரையிறங்கும் இடம் 'திரங்கா' புள்ளி என்றும் அழைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
We hope @isro loves this #vegan cake delivered by PETA India today to the moon and back. ♥️Made with love and respect by #CravebyLeena in Bengaluru. Congratulations India! ?? https://t.co/OT5LAWcYeR@narendramodi #Chandrayaan3 #Chandrayaan3Landing #ISROChandrayaan3 #ISRO… pic.twitter.com/FOtYyZDQro
— PETA India (@PetaIndia) August 25, 2023