ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது.
ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
அப்போது, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவப் பதவிக்கு ரஷியாவின் ஆதரவுக்காக புதினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
பின்னர், டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
அப்போது, ஜி20 மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியாது என்றும் ரஷிய பிரதிநிதியாக வெளியுறவு அமைச்சர் பங்கேற்பார் எனவும் பிரதமர் மோடியிடம் புதின் கூறினார்.