பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 104வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "நாளை காலை 11 மணிக்கு டியூன் செய்யுங்கள். இந்தியா முழுவதிலும் இருந்து எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களை முன்னிலைப்படுத்துவதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மன் கி பாத் அக்டோபர் 3, 2014 அன்று தொடங்கி, அதன் 100வது அத்தியாயத்தை ஏப்ரல் 30, 2023 அன்று அடைந்தது குறிப்பிடத்தக்கது.