பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்றார். சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில், இரவு 11 மணியளவில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இங்கு நீங்கள் பாரத் மாதா கீ ஜே என கோஷமிடுவதைக் கேட்கும்போது எனக்கு இந்தியாவில் கேட்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
நான் பலமுறை பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளேன். இம்முறை எனது வருகை சிறப்பானது.
நாளை தேசிய தினத்தைக் கொண்டாடும் பிரான்ஸ் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி, நாளை எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரானுடன் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறேன்.
இது இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள ஆழமான நட்புறவின் பிரதிபலிப்பாகும்.
எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நாங்கள் நழுவவிட மாட்டோம், ஒரு கணமும் வீணாக விடமாட்டோம் என்று இந்தியா தீர்மானித்துள்ளது. எனது ஒவ்வொரு நொடியும் நாட்டு மக்களுக்கானது என்று தீர்மானித்துள்ளேன்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சின் பெருமையைக் காக்கும் இந்திய வீரர்கள், தங்கள் கடமையைச் செய்யும் போது பிரெஞ்சு மண்ணில் வீரமரணம் அடைந்தனர். இங்கு போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட், நாளை தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. உலகின் பழமையான மொழி தமிழ் என தெரிவித்தார்.